கனவு கண்ட அகிலேஷ் யாதவை கிண்டலடித்த பிரதமர் மோடி!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:50 IST)
தன்னுடைய கனவில் கிருஷ்ணர் வந்ததாகவும் உத்தரபிரதேசத்தில் தன்னுடைய தலைமையிலான ஆட்சி தான் நடக்கும் என்று கனவில் கூறியதாகவும் கூறிய அகிலேஷ் யாதவை பிரதமர் மோடி கிண்டலடித்து பேசியுள்ளார் 
 
நேற்று பிரதமர் மோடி காணொலி மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது சிலர் கடவுளே நேரில் வந்து கூறியதாக கனவு காண்கின்றனர் தூக்கம் வருபவர்களுக்கு மட்டும் தான் கனவு வரும். தூங்காமல் விழித்துக் கொண்டு உழைப்பவர்களுக்கு கனவு எப்படி வரும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் தன்னுடைய கனவில் கிருஷ்ணர் வந்ததாகவும் உத்தரபிரதேசத்தில் தன்னுடைய கட்சியின் ஆட்சிதான் நடக்கும் என்றும் கூறிய்தற்கு பதிலடியாக பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமானால் பாஜக வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்