கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் குஜராத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸ் தொற்று பாதித்த நிலையில், தற்போது சென்னையிலும் இரண்டு குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் HMPV என்ற வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து சென்னையிலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நாடு முழுவதும் மூன்று குழந்தைகளுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.