ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

Siva

திங்கள், 6 ஜனவரி 2025 (18:20 IST)
பிரபல தேர்தல் வியூகம் மன்னன் பிரசாந்த் கிஷோர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாகவும், இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பீகார் தேர்வாணைய தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்த பிரசாந்த் கிஷோர் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர் ஜாமீன் மனுவில் கையெழுத்திட மறுத்துவிட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கைது செய்த காரணம் குறித்து நீதிமன்றத்தில் போலீசார் விளக்கியபோது, தடை விதிக்கப்பட்ட பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்ததால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்தில் ஒரு மர்மமான வேன் ஒன்று இருந்ததாகவும் காவல்துறை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறையிலும் பிரசாந்த் கிஷோர் தனது உண்ணாவிரதத்தை தொடர இருப்பதாகவும், இது அவரது ஐந்தாவது நாள் உண்ணாவிரத போராட்டம் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்