அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், ஞானசேகரன் சொத்து மதிப்புகள் குறித்து ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வுத்துறை பத்திரப்பதிவு மற்றும் வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் அவரது வீட்டில் சிறப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லேப்டாப் உட்பட சில ஆவணங்களை கைப்பற்றிய போது, அதில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நகைகள், சொத்துக்கள் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஞானசேகரன் மனைவிகளிடமும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில், ஞானசேகரன் நிறைய சொத்துக்களை வாங்கி போட்டு இருப்பதாக தெரியவந்துள்ளதால் பத்திரப்பதிவு, வருவாய் துறை, சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், ஞானசேகரன் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.