ரிசல்ட்டே வரல அதுக்குள்ள மோடிக்கு வாழ்த்து... அசத்தும் முன்னாள் அதிபர்

Webdunia
திங்கள், 20 மே 2019 (13:13 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் 23 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில் ஊடகங்கள் நேற்று மாலை முதல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 
 
கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் மகமது நஷீத் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். 
 
அதில், இந்திய தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக அரசுக்கும், மோடிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவு மக்களும் அரசாங்கமும் பிரதமர் மோடியுடன் உறவை தொடர்வதில் மகிழ்ச்சியடைவார்கள்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்