அதன்படி இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 16 இடங்களும், இடதுசாரிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்றும், மலையாள மனோரமா நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸுக்கு 13 இடங்களும், இடதுசாரிகளுக்கு 2 இடங்களும், மீத 5 இடங்கள் இழுபறியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
கேராளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சிகள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு பகுதியில் வேட்பாளாராய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.