அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலணி வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனால், கமல் மீது காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் எச்.ராஜா தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.
ஆனால், சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட கமல், ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்புக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு அந்த அருகதை உண்டு. என் மீது செருப்பு விசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அல்ல என பேசியது குறிப்பிடத்தக்கது.