’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

Mahendran

சனி, 5 ஏப்ரல் 2025 (16:07 IST)
’எம்புரான்’  தயாரிப்பாளர் வீட்டில் ரூ. 1.5 கோடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான ’எம்புரான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ஒரு பக்கம் ரூ. 200 கோடி வசூல் செய்தாலும், இன்னொரு பக்கம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.
 
இந்த நிலையில், ’எம்புரான்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலன் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அன்னிய செலாவணி மோசடிக்கு தொடர்பான ரூ. 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 
இதையடுத்து கோபாலனை அமலாக்கத்துறை விசாரித்ததாகவும், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் இயக்குநரான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்