மோடி அலை வீசுனப்பவே 269 தான் … இப்ப 306 இடமா ? – சமூகவலை தளங்களில் பெருகும் கேள்வி !

திங்கள், 20 மே 2019 (10:44 IST)
நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 

தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொதுமக்களிடையேப் பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்லப்பட்டது. மேலும் காங்கிரஸ் அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருந்தது. அப்போதே பாஜக மொத்தமாக 269 இடங்களை மட்டுமேக் கைப்பற்றியது. ஆனால் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மோடி மீதும் பாஜக மீதும் கடந்த முறைக் காங்கிரஸ் அரசின் மீது இருந்த அதிருப்தியை விட அதிக அளவில் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில் எப்படி பாஜக 306 இடங்களைக் கைப்பற்ற முடியும் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்