என்றும் இல்லாமல் இன்று எகிறிய கொரோனா - காரணம் இந்த மாநிலங்களா?

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:44 IST)
கொரோனா தினசரி பாதிப்பு உயர்வதற்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் இன்று 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
 
இன்று இந்த அளவு கொரோனா தினசரி பாதிப்பு உயர்வதற்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஆம், மகாராஷ்டிராவில் புதிதாக 1,881 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
கேரளாவில் புதிதாக 1,494 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர டெல்லியில் 450, கர்நாடகாவில் 348, அரியானாவில் 227, தமிழ்நாட்டில் 144, உத்தரபிரதேசத்தில் 127 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்