இந்த நிலையில், அவர் தங்கி உள்ள கிண்டி நட்சத்திர ஓட்டலில் திடீரென ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர், அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரியிடம், "அமித் ஷாவை நான் சந்தித்தே ஆக வேண்டும். அவருடன் ஒரு முக்கிய செய்தி சொல்ல வேண்டும்," என்று தெரிவித்தார்.
மேலும், “இந்தியா அமெரிக்காவுடன் நிற்க வேண்டுமா அல்லது சீனாவுடன்ம் நிற்க வேண்டுமா? சீனாவை நாம் பகைத்துக் கொண்டால், சீனா இலங்கையில் இருக்கும் அம்மன் தோட்டா துறைமுகத்தில் படையை வைத்து இந்தியாவை தாக்கும்,” என்றும், “இது குறித்து நான் அமித்ஷா அவர்களிடம் பேச வந்திருக்கிறேன். என்னை அனுமதி எண்கள்,” என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு செல்பி வீடியோ ஒன்றை எடுத்து, “இந்த வீடியோவை அமித்ஷாவிடம் போட்டு காட்டுங்க,” என்று ஆவேசமாக கூறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.