இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டது. இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து இந்திய அரசும் அறிக்கை வெளியிட்டது.
இருப்பினும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பாஜக செய்தி தொடர்பாளரின் கருத்துக்கு ஈரான், ஈராக், குவைத், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் சில நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடிதம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த கடிதத்தில் இஸ்லாமிய மத இறைதூதர் நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம்.