உலக சாதனையுடன் தங்கம்: இந்தியா வீராங்கனை அசத்தல்

புதன், 8 ஜூன் 2022 (09:21 IST)
உலக சாதனையுடன் தங்கம்: இந்தியா வீராங்கனை அசத்தல்
இந்திய வீராங்கனை அவனி லெகரா  என்பவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவனி லெகரா, தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் பாரா துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். நேற்று அவருக்கு பெண்கள் R2 10 மீட்டர் ஏர் ரைஃபில் எஸ்.எச்.1 பிரிவில் தங்கப் பதக்கம் கிடைத்தது
 
அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அவர் பெற்ற புள்ளிகள் 250. 6.  இதற்கு முன்னர் உலக சாதனையை புள்ளி 249.6 என்று இருந்த நிலையில் அந்த சாதனையை அவர் முறியடித்து புதிய உலக சாதனை செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்