ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (17:32 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைகிறது என்றும், இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
நேற்று சென்னை வந்த அமித்ஷா, கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி, ஆடிட்டர் குருமூர்த்தி, ஜி. கே. வாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர், எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு நடந்தது.
 
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, “2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
 
இந்த பேட்டியின்போது எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
மேலும், “யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் பேசிப் தீர்மானிக்கப்படும். எங்களை பொறுத்தவரை, வெற்றி பெற்ற பிறகு ஆட்சி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றும் தெரிவித்தார்.
 
அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடமாட்டாது என்றும், நீட் தேர்வு விவகாரம் குறித்து அதிமுகவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
“இந்த கூட்டணி உறுதியாக அமைந்துள்ளது. இதில் எந்தவித குழப்பமும் இல்லை,” என அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்