கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (20:01 IST)
கேரளாவில் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி மலைப்பிரதேசங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டுள்ளது.

 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை மழைக்கு 60 பேர் பலியாகியுள்ளனர்.
 
மேலும் கேரளாவில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மலையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இதனால் பாதுகாப்பு கருதி மலை பிரதேசங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்