போலீஸ் டிரைவரை கடுமையாக தாக்கிய ஐபிஎஸ் மகள்

சனி, 16 ஜூன் 2018 (11:21 IST)
காரை தாமதமாக எடுத்து வந்த போலீஸ் டிரைவரை கடுமையாக தாக்கிய ஐபிஎஸ் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளை சொந்த வேலைகளுக்கு பயன் படுத்துவதே தவறு. அதிலும் கேரளாவில் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலத்தில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சுதேஷ் குமார். இவரது கார் ஓட்டுநரான ஆய்தப்படை காவலரான கவாஸ்கர், சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள் வாக்கிங் செல்வதற்காக அவர்களை பார்க்கிற்கு அழைத்து சென்று பின் வேறிடத்திற்கு சென்றார்.
 
ஆனால் அவர்களை திரும்ப அழைத்து செல்ல கவாஸ்கர் தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுதேஷ் குமாரின் மனைவி மற்றும் மகள், கவாஸ்கரை செல்போனால் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கவாஸ்கர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கவாஸ்கரின் மனைவி ரேஷ்மா, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனிடம் தனது கணவரை மேலதிகாரிகள் கொத்தடிமைகள் போல் நடத்துகின்றனர் என புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்