பிரச்சனை தீர்ந்தது வாருங்கள்: சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்த சிம்லா ஹோட்டல்கள்

செவ்வாய், 19 ஜூன் 2018 (13:39 IST)
சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது வாருங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
சிம்லாவில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் ஈட்டும் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் உள்ளிடவை கடுமையாக பாதிகப்பட்டன.
 
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்தனர். சிம்லா மாநகராட்சி அட்டவணைப் போட்டு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது. இப்போது சிம்லாவில் நிலவும் ரம்மியமான சூழலைக் காண சுற்றுலா பயணிகள் சிம்லாவுக்கு வர வேண்டும் என ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்