நான் மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: மோடி கான்ஃபிடெண்ட்!

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (19:08 IST)
2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகின்றனர் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ். தற்போது முதலே மோடி, நான் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என கூறிவருகிறார். 
இது குறித்து அவர், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தது பின்வருமாறு, 2019 தேர்தலை நான் மட்டுமல்ல இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். 
 
கடந்த நான்கரை வருடங்களாக பாஜக அரசு மக்களுக்கு செய்த நன்மைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மக்கள் காத்துக்கிடக்கின்றனர். மோடி அரசில் வேலைவாய்ப்பு இல்லை என காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. 
 
ஆனால், எங்கள் ஆட்சியில் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அந்த இளைஞர்கள் எங்களை ஆதரிப்பார்கள். எனவே, மக்களின் பெரும் ஆதரவுடன் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும். கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்களை கைப்பற்றி நான் மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்