வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைப் பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த புயல் பாண்டிச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக 80 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசியுள்ளது.
இந்நிலையில் சென்னையின் முக்கிய நீதாராங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட அளவு 20 அடியைத் தொட்டுள்ளது. அதன் மொத்த உயரம் 24 அடி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரிக்கு வரும் நீர்வர்த்தின் அளவு 3,675 கன அடியாக உள்ளது. இதனால் விரைவில் ஏரியின் முழு கொள்ளளவும் எட்டக்கூடும் என எதிர்பார்க்கக் கூடுகிறது. இதனால் ஏரி தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.