இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை வாழ்த்திய பிரதமர் மோடி, தோல்வி அடைந்த ஹரிபிரசாத் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பிக்கள், பிரதமர் மோடியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை வலியுறுத்தினர்.