எதிர்ப்புகளை மீறி பதவியேற்கும் இம்ரான் கான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி, 11 ஆகஸ்ட் 2018 (10:22 IST)
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்தது.  

 
117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியானது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமாக வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. 
 
ஆனால், பதவியேற்பில் எதிர்கட்சிகளால் சில குழப்பம் ஏற்பட்டது. ராணுவத்தின் பலத்தால் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொம்மை அரசாங்கம் அமைவதை கடுமையாக எதிர்க்கிறோம் என எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
தற்போது இவை அனைத்தையும் மீறி இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் 15 வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 13 ஆம் தேதி கூடுகிறது. 
 
அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்கின்றனர். வரும் 14 ஆம் தேதி அந்நாட்டின் சுதந்திர தினத்துக்கு பின்னர்,  பிரதமராக இம்ரான் கான் 18 ஆம் தேதி பதவி ஏற்று கொள்வார் என தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைமையகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்