உணவு டெலிவரி செய்த 'இஸ்லாமிய இளைஞர்' : 'சுவிக்கி ஆர்டரை 'கேன்சல் செய்த நபர் !

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:20 IST)
சுவிக்கி நிறுவத்தில் ஒரு இளைஞர் உணவு ஆர்டர் செய்தார். ஆனால் ஒரு இஸ்லாமி இளைஞர் அந்த உணவை டெலிவரி செய்ய வந்ததால் கேன்சல் செய்தார். இந்நிலையில் உணவரி வாங்க மறுத்தவர் மீது சுவிக்கி நிறுவனம் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹதராபாத்தில், சுவிக்கி செயலி மூலம் ஒருஇளைஞர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இந்து இளைஞர் மூலமாக டெலிவரி செய்ய வேண்டுமென வற்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஒரு இஸ்லாமிய இளைஞர் டெலிவரி செய்துள்ளார்..
 
அதனால் ஆவேசமடைந்த, இளைஞர், உணவை வாங்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பி உள்ளார். 
 
இதனையடுத்து, அந்த நபர் மீது சுவிக்கி நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதி  ஒருவர் புகார் அளித்துள்ளார். 
 
ஏற்கனவே, இஸ்லாமி டிரைவர் என்பதால், ஊபர் வாகனத்தை ஒரு பெண் கேன்சல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்