இளைஞரை கொலை செய்து, 15 கி.மீ சாலையில் இழுத்துச் சென்ற கொடூரம் !

புதன், 25 செப்டம்பர் 2019 (16:47 IST)
ஒரு இளைஞர் ஒருவரை கொலை செய்து, 15 கி.மீ தூரம்வரை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள கர்கவுதா  என்ற நகர் உள்ளது. இங்கு,  ரத்தக் கறையுடன் ஒரு இளைஞரின் சடலம் சாலையில் இருந்ததைக் கண்டு, அப்பகுதியினர்  போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில்,  கொலை செய்யப்பட்ட நபர் புலந்ஷாகர் என்ற பகுதியைச் சேர்ந்த முகுல்குமார் (21) என்பது தெரியவந்தது. 
 
கடந்த ஆண்டு அவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தன் பெற்றோருடன் ஹபூர் என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், 3 பேர் கொண்ட கும்பல் , முகுல் குமாரை கொலை செய்து அவரது உடலை ஒரு போர்வையில் வைத்துக் கட்டி, அவரது கழுத்தில் கயிற்றை கட்டி இரு சக்கரத்தில் இணைத்து சுமார் 15 கிமீ தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
 
இந்த சம்பவத்தில், முகுல் குமாரின் உடலில் சதைகள் கிழித்து, ஒரு கால் துண்டாவது.  உடல் முழுவதில் ரத்தம் தோய்ந்த நிலையில் இருந்த முகில் குமாரின் சடலத்தை கர்கவுதா என்ற பகுதியில் அந்த கும்பல் வீசிச் சென்றுவிட்டனர்.
 
முகுல் குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது, முகில் குமாரை கொலை செய்த கும்பல் பயன்படுத்திய டூவீலரின் பதிவு எண்ணை வைத்து, சந்திர பால் என்பவரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சில நாட்களுக்கு முன்னர் முகு ல்குமார் தன்னிடம் பைக் வாங்கிச் சென்றதாகக் கூறியுள்ளார்.
 
இளைஞரைக் கொன்று, 15 கிமீ., சடலத்தை இரு சக்கரவாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்