மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

Mahendran

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (18:27 IST)
மகாராஷ்டிராவில்  உத்தவ் தாக்கரே இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது இங்கு முட்டாள் அரசாங்கம் நடப்பதாக கூறினார்.
 
மகாராஷ்டிராவில் தற்போது நடைபெறும் ஆட்சி தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையுடன் அமைக்கப்பட்ட அரசு என்றும் இந்த அரசு பல விஷயங்களில் நம்மை தவறாக வழிநடத்தி, எதுவும் புரிந்து கொள்ளாத நிலைக்கு இழுத்துவிட்டதாக கூறினார். எனவே, இந்த அரசு 'முட்டாள்' அரசாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது துணை முதல்வர் அஜித் பவார், இத்தகைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
 
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் ஏன் நடைபெறுகிறது என்று கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி மொழி இருப்பதால், அதை மதித்து, அனைவரும் புதிய மொழிகளை கற்றுக்கொள்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்