பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலித்தாலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் இது குறித்து கூறிய போது, இயக்குனர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல் என்றும், எம்புரான் படம் ரிலீஸ் ஆனபோது இந்த படம் உலக அளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று அவரது மனைவி கூறியதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.