இவர்களின் காதல் குறித்து, இளைஞரின் தாய்க்கு முன்னமே தெரியும் என்பதால், இளம்பெண்ணுக்கு சாப்பிட சில உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். அதில் ஏற்கனவே மயங்க மருத்து வைத்திருந்ததால் அதைச் சாப்பிட்ட பெண் மயக்கம் அடைந்தார்.
அதனையடுத்து அப்பெண்ணை இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். அந்த இளைஞரின் தாய் அதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இளைஞரின் சகோதரி, அவரது கணவன் ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணுக்கு இந்த வீடியோவை காட்டி, இதை வெளியிட்டு விடுவோமென மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அதனால் பயந்து போன இளம் பெண், தன் தந்தை நிலத்தை விற்று வைத்திருந்த சில லட்சங்களை அவர்களிடம் கொடுத்துள்ளார். பிறகு, மீண்டும் பணம் கேட்டு இளம்பெண்ணை மிரட்டல் விடுக்கவே, அப்பெண் தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.