மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

Senthil Velan
செவ்வாய், 7 மே 2024 (14:16 IST)
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னால் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. 
 
கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ALSO READ: வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் முரணாக உள்ளது.! கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கார்கே கடிதம்..!

இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 15ம் தேதி வரை அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்