இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் கடந்த மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முடித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளதால் தற்போதைய சூழலில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் உட்பட எந்தவித நிவாரணங்களும் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.