மதுபானம் வாங்க...குழந்தையை விற்ற ’குடிகாரத் தந்தை!

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (17:49 IST)
நம் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள புர்ஜா பஞ்சாயத்துக்கு உட்பட்ட புஜாரிகுடா என்ற கிராமத்தில்  வசிப்பவர் சாகரம் லோஹர் . இவரது மனைவி சனாமதி. இந்த தம்பதிக்கு ஒருகுழந்தை உள்ளது.
இந்நிலையில் சாகாரம் லோஹர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கோவிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று வந்ததும் அவருக்கு மதுபானம் குடிக்கவேண்டும் என ஆசை வந்துள்ளது. அதை தன் மனைவியிடமும் கூறியுள்ளார்.
 
அதற்கு சனாமதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சாகரம் மனைவி கையில் வைத்திருந்த குழந்தையை பிடுங்கி, அருகில்  இருந்த 2 பேரிடம் ரூ. 1000க்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து  தனது மனைவி கேட்டதற்கு சாகரம் அவரை கடுமையாக தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனைத்தொடர்ந்து, சனாதம் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்