மதுபான உற்பத்தியாளர்கள் இனிமேல் 200 மில்லிக்கும் குறையாத அளவுள்ள பாட்டில்களில் மட்டுமே மதுவை அடைத்து விற்பனை செய்ய முடியும். அங்கு மது விற்பனைக்கு என்று தனியாக எதுவும் கொள்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் இந்த முயற்சி உகாண்டா மக்கள் மது அருந்துவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது.