மதுபானம் அளவுடன் குடித்தால் உடலுக்கு நல்லது ! - அமைச்சர் அறிவுரை

வியாழன், 4 ஜூலை 2019 (18:06 IST)
தமிழகத்தில் அரசே மதுபானம் விற்பனை செய்கிறது. அதனால் வயதானவர்கள் , இளைஞர்கள் முதற்கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என இளைய சமுதாயமே குடிப்பழக்கத்திற்கு மாறிவருகின்றனர். இந்நிலையில் இன்றைய  சட்டசபை கூட்டத் தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. அதில் மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால் பிரச்சனை ஏற்படாது என்றும்.. அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல்நலம் கெட்டுப்போகத்தான் செய்யும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இன்றைய கூட்டத்தில் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம்  நடைபெற்றது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் : தற்போது வரும் மதுபானங்கள் தரம் குறைவாக உள்ளதாகவும், அதனால் பலருக்கு சிறுநீர் பாதிப்புகள் வருவதாகவும் ,உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் : மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதால் படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டுகிறது.  தமிகத்தில் 6, 132 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை தற்போது 5152 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
 
மதுகுடிப்போர் அளவுடன் குடித்தால் பிரச்சனை இல்லை, அளவுக்கு அதிகமாக குடித்தால் உடல் நலம் கெடும் அதற்கு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்று தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ :மதுபானத்தில் அச்சிடப்படும் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதை இனிமேல் அளவுடன் குடித்தால் உடலுக்கு நல்லது என்று அச்சிடலாம் என்று தெரிவித்தார் அவையில் சிரிப்பலை எழுந்தது. 
 
சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் இருபெண்கள், கழிப்பறையில் மதுபானம் குடிக்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்