காரை கையால் அலேக்காக தள்ளி போட்ட ஆசாமி!

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (15:07 IST)
செல்லும் வழியில் வழிமறித்து நின்ற கார் ஒன்றை ஆசாமி ஒருவர் கைகளாலேயே தூக்கிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் சாலை ஒன்றில் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். குறுகலான சாலை ஒன்றில் யாரோ ஒருவர் காரை ஓரமாக பார்க் செய்து வைத்துள்ளார். இதனால் இவரது கார் சாலையை தாண்டி செல்ல முடியாத சங்கடம் ஏற்பட்டுள்ளது.

இவரும் யாராவது முன்னால் நிற்கும் காரை நகர்த்துவார்கள் என ஹார்ன் அடித்து பார்த்திருக்கிறார். யாரும் வராததால் கடுப்பான அந்த ஆசாமி தானே இறங்கி சென்று எதிரே நின்ற காரை தனது கைகளால் தூக்கி ஓரமாக தள்ளி வைத்துவிட்டு மீண்டும் தனது காரில் ஏறி சாலையை கடந்து சென்று விட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதை ஷேர் செய்த நபர் ”புத்தர் உனது வழியை நீயே உருவாக்கி கொள் என்று சொல்லியிருக்கிறார்” என எழுதி அதற்கு பஞ்சாபி ஒருவர் ஒகே என்று சொல்வதாக பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.

பைக் பார்க் செய்ய போகும் இடங்களில் இளைஞர்கள் சிலர் ஏற்கனவே நிற்கும் பைக்குகளை ஒதுக்கி இடம் ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். இனி இதுபோல கார்களையும் கைகளாலேயே தூக்கி நகர்த்துவார்கள் போல என சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்