திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

Siva

புதன், 26 ஜூன் 2024 (08:38 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவி அவர்களை சந்தித்து மனு அளித்தார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரம் பரபரப்பாக இருக்கும் நிலையில் திடீரென என்ற ஆளுனர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அவர் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அதிகாரிகளை சந்திப்பார் என்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில் கவர்னர் ரவி டெல்லி சென்றுள்ளது வரவரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்