இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

Siva

புதன், 26 ஜூன் 2024 (08:49 IST)
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஒரு சபாநாயகர் வேட்பாளரும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு சபாநாயகர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணி அறிவித்த சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என மம்தா பானர்ஜி கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென இந்தியா கூட்டணியின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் என்பவர் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,

 இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தியா கூட்டணி தங்களிடம் ஆலோசனை செய்யவில்லை என்றும் எனவே இந்தியா கூட்டணி அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என்றும் மம்தா பானர்ஜி கட்சி தெரிவித்துள்ளது

எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள 29 எம்பிகள் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்பிக்கள் ஓம் பிர்லாவை ஆதரிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லா வெற்றி பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்