4 மாதங்களில் 9 நாடுகள்.. வெறித்தனமாக பறக்கும் மோடி

Arun Prasath

வியாழன், 21 நவம்பர் 2019 (09:15 IST)
கடந்த 4 மாதங்களில் பிரதமர் மோடி 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல வெளிநாடுகளுக்கு அரசு ரீதியிலான பயணம் மேற்கொண்டுவருகிறார். தனது 69 வயதிலும் எப்படி இவர் இவ்வளவு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என பலரும் வியந்து கேட்பதும் உண்டு.

இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டு பயணம் குறித்து மக்களவையில் கேள்வி எழுந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார். அதில் கடந்த ஆகஸ்து மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பூடான், பிரான்ஸ், பக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா, தாய்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த 4 மாதங்களில் சீன அதிபர் உட்பட 14 வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்