வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

Mahendran

புதன், 26 ஜூன் 2024 (10:02 IST)
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், வடமாநிலத்திற்கு  சிபிசிஐடி விரைந்துள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளது. 
 
இந்த நிலையில் முன்னால் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வட மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் சிபிசிஐடிக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சிபிசிஐடி போலீசார் வடமாநிலத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவரை கைது செய்து அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மீண்டும் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவருக்கு முன் ஜாமின்கிடைத்தால் அதன் பிறகு அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமறைவாக இருந்து வட மாநிலத்திற்கு தப்பி சென்றதாக கூறப்படும் தகவல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்