விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

Siva

புதன், 26 ஜூன் 2024 (08:32 IST)
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் என்ற 35 வயது நபர் உயிரிழந்த நிலையில் விஷச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விஷச்சாராயம் குடித்தவர்கள் 20 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி விஷச்சாராய விவகாரத்தில் ஏற்கனவே 60 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஷச்சாராய விவகாரத்தில் ஒரே ஒரு ஊரில் மட்டும் 61 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இனிமேல் இது இப்படி ஒரு சம்பவம் நடக்காதவாறு அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்