அதாவது அவரது மகள்களில் இரண்டு குழந்தைகளை ஆசிரமத்திற்கு சொந்தமான குடியிருப்பிலும், 21 மற்றும் 18 வயதான (லோகமுத்ரா ஷர்மா, நந்திதா ஷர்மா) 2 மகள்களை ஆசிரமத்திற்கும் மாற்றியுள்ளனர்.
இதனை அறிந்த ஜனார்த்தன ஷர்மா, உடனடியாக அகமதாபாத்திற்கு விரைந்தார். குடியிருப்பில் அடைத்துவைக்கப்பட்ட இரண்டு குழந்தைகளை போலீஸார் மீட்டு ஷர்மாவிடம் ஒப்படைத்த நிலையில், தனது மூத்த மகள்களான லோகமுத்ரா மற்றும் நந்திதா ஆகியோரை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்துவைத்துள்ளனர் என குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஷர்மா வழக்கு தொடுத்தார். இன்று அந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.