சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

vinoth
புதன், 12 மார்ச் 2025 (13:24 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி இருந்து லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் எடுக்கப்படவில்லை. இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்