இந்த நிலையில், இந்த வாரத்தை பொருத்தவரை திங்கள்கிழமை காலை உயர்ந்தது போல் தெரிந்தாலும், திடீரென மீண்டும் சரிந்தது. நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இருந்தது. இன்றும் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து, 73,752 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 110 புள்ளிகள் சரிந்து, 22,378 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.