ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடனும் ஒப்பந்தம்! இந்தியாவுக்குள் நுழைய ஸ்டார்லிங்க் தீவிரம்!

Prasanth Karthick

புதன், 12 மார்ச் 2025 (12:25 IST)

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் நுழைய ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோ நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் வழியாக நேரடி இணைய சேவைகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த சேவைகளை தொடங்க நீண்ட காலமாகவே எலான் மஸ்க் முயற்சித்து வருகிறார். எனினும் நேரடியாக ஸ்டார்லிங்க் சேவைகளை இந்தியாவில் தொடங்க முடியாத சூழலில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களோடு கைக்கோர்த்துள்ளது ஸ்டார்லிங்க்.

 

முதலில் ஏர்டெல்லுடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் செய்த நிலையில், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக்கடைகள், வாடிக்கையாளர் மையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய உள்ளதாக ஏர்டெல் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் அடுத்ததாக ஜியோ நிறுவனத்துடனும் ஸ்டார்லிங் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தருவதையும் உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்” என தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்