ஆறுமுறை ஐசிசி தொடரை நடத்தியும் ஏன் உங்களால் வெல்ல முடியவில்லை… இங்கிலாந்து வீரர்களுக்கு கவாஸ்கர் கேள்வி!

vinoth

புதன், 12 மார்ச் 2025 (10:00 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.  இதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை இந்திய அணி வென்றது. இதன் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய அணி.

இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றாலும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று “இந்திய அணி இந்த தொடர் முழுவதும் ஒரே மைதானத்தில் விளையாடியது” என்பதுதான். குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இந்த விமர்சனத்தை இந்திய அணியின் மேல் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார். அதில் “இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது என்பது தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஐசிசியால் எடுக்கப்பட்டது. இவர்கள் விமர்சனம் வைக்க வேண்டுமென்றால் அப்போதே வைத்திருக்க வேண்டும். இங்கிலாந்து ஆறு முறை ஐசிசி தொடரை நடத்தியும் ஏன் 2019 க்கு முன்பு அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்