நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி இருந்து லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “பாகிஸ்தான் அணி தற்போது ICU வில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த முடிவுகளும் நிலைத் தன்மை உடையதாக இல்லை. வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.