பாகிஸ்தான் ரயில் கடத்தல்! பயங்கரவாதிகளை கொன்று பயணிகள் மீட்பு! - எல்லையில் பரபரப்பு!

Prasanth Karthick

புதன், 12 மார்ச் 2025 (11:11 IST)

பாகிஸ்தான் ரயிலை பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் பயணிகளை மீட்டுள்ளனர்.

 

பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தான் பகுதிகளை தனி நாடாக்க கோரி வரும் அமைப்புகளில் பலுச் விடுதலை இராணுவமும் (BLA) ஒன்று. இந்த அமைப்பு அடிக்கடி பாகிஸ்தானிற்குள் பல தாக்குதல் சம்பவங்களை நடத்தி வந்தது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவில் இருந்து கைபர் கனவாய் வழியாக பெஷாவர் சென்றுக் கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பயங்கரவாத கும்பல் கடத்தினர்.

 

இதனால் ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஆபத்தில் சிக்கிய நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு படை ரயிலை மீட்கும் முயற்சியை மேற்கொண்டபோது பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 16 பயங்கரவாதிகளை கொன்று 104 பயணிகளை பாகிஸ்தான் மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்