கோலியை ஓப்பனிங் இறக்கிவிட்டு ரோஹித் மூன்றாவதாக இறங்கவேண்டும்.. முன்னாள் வீரரின் கேம் ப்ளான்!

vinoth
சனி, 4 மே 2024 (07:01 IST)
அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் வைக்கப்படும் விளம்பரங்களில் விராட் கோலியின் புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் கோலியின் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் தற்போது அறிவிகப்பட்டுள்ள அணியில் கோலி இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் கோலியும் ரோஹித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. அதுபற்றி இதுவரை ரோஹித் ஷர்மா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அணியில் இளம் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இருப்பதால் அது சாத்தியமா என தெரியவில்லை.

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா இதுபற்றி பேசியுள்ளார். அதில் “கோலியைத் தொடக்க ஆட்டக்காரராக இறக்கிவிட்டு ரோஹித் ஷர்மா மூன்றாவதாக இறங்கவேண்டும். கோலி பவர் ப்ளேயில் விளையாடினால் அவால் நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட முடியும். ரோஹித் மூன்றாவதாக இறங்கினால் அவரால் ஆட்டத்தின் போக்கைப் புரிந்துகொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்