ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன. 20 அணிகள் மோதுகின்ற நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.
இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் ஆடுவதற்கு எதற்கு நான்கு ஸ்பின்னர்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக நான்கு பேரையும் பயன்படுத்தப் போவதில்லை என்பதால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.