அது இருவருக்கும் நடந்த நல்லது…. கோலி கேப்டன்சி குறித்து ரவி சாஸ்திரி!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (09:27 IST)
இந்திய அணியின் கேப்டன்சி கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டது பல்வேறு கருத்துகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக இப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ‘இந்த முடிவு இருவருக்குமான ஆசிர்வாதமாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் இப்போதுள்ள கொரோனா சூழலில் பயோபபுளில் இருந்து கொண்டு ஒரு வீரரால் 3 வடிவிலான அணியையும் நிர்வகிப்பது கடினம். கோலி தனது முழு கவனத்தையும் இப்போது சிவப்பு பந்து கிரிக்கெட் மீது செலுத்தலாம். அவரது ஆட்டம் குறித்து ஆற அமர சிந்திக்க உதவும். எப்படியும் அவர் இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்