சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

vinoth

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (09:39 IST)
நாளைத் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருக்க, இந்தியா மட்டும் துபாயில் உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது.

முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இப்போது இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார்? அரையிறுதிக்கு செல்லும் அணிகள் எவையெவை? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் “இந்தியா, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மோதும். அதில் இந்திய அணி வெல்லும்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்