பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

vinoth

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (12:50 IST)
நாளைத் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருக்க, இந்தியா மட்டும் துபாயில் உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது.

முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இரு அணிகளும் வரும் 23 ஆம் தேதி மோதுகின்றன.

இந்த போட்டியில் யார் வெல்வார் என்பது குறித்துப் பேசியுள்ள இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “பாகிஸ்தான் அணியை எடுத்துக்கொண்டால் பாபர் அசாம், ரிஸ்வான் என முக்கிய வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு எதிராக நல்ல சராசரியை வைத்திருக்கவில்லை. ஆனால் பகார் ஸ்மான் மட்டும் இந்தியாவுக்கு எதிராக 46 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். அவர் நினைத்தால் இந்தியாவிடம் இருந்து போட்டியைக் கைப்பற்ற முடியும். ஆனால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பார்த்தால் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக சண்டை போடுவார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்