அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கினர். இது குறித்த கேள்விக்கு ஹர்திக்கின் பிட்னெஸ் ஒரு பிரச்சனையாக சொல்லப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா இப்போது கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துகிறார். அவர் ஐபிஎல் கிரிக்கெட் மூலமாகதான் கவனம் பெற்று இந்திய அணியில் இடம்பெற்றார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி முதல் முதலாக ஹர்திக் பாண்ட்யாவை சந்தித்ததைப் பற்றி கூறியுள்ளார். அதில் “மும்பை அணிக்காக திறமையான இளம் வீரர்களைக் கண்டறிய நாங்கள் பல உள்நாட்டு போட்டிகளை பார்க்க சென்றோம். அப்போதுதான் நான் பாண்ட்யா சகோதரர்களைப் பார்த்தேன். அப்போது அவர்கள் மிகவும் ஒல்லியாக இருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு வறுமை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நூடுல்ஸ் தவிர வேறு எதுவுமே சாப்பிடவில்லை எனத் தெரிந்தது. அந்த வறுமையான சூழலிலும் அவர்கள் கிரிக்கெட் மேல் தீராக்காதல் கொண்டிருந்தனர். அந்த நிலையில் இருந்துதான் தற்பொது மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.